(2022-2023) கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் முழு பாடத்திட்டம் அமல்...பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

இந்தியா: கடந்த 2020ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெரும் தொற்றால் கல்வி நிறுவனங்களின் கற்றல் நடவடிக்கைகளில் பெரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தி வந்து இருந்தது. அந்த வகையில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டும் நிலை வந்தது , அதனால் ஆன்லைன் மூலமாகவே மாணவர்கள் பாடங்கள் கற்பித்து வந்தனர். இதற்கிடையில் அவ்வப்போது குறைந்து வந்த நோய்ப்பரவலை கருதில் கொண்டு பள்ளிகளுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு ஒரு சில வகுப்புகளுக்கு தேர்வுகளும் நடத்தப்பட்டது.

அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளில் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 50 சதவீதம் வரைக்கும் பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. அதே போல 9ம் வகுப்புகளுக்கு 38%மும், 10ம் வகுப்புக்கு 39% மும், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 35 சதவீதமாக பாடங்கள் குறைக்கப்பட்டன.

தற்போது துவங்கி இருக்கும் (2022-2023) புதிய கல்வியாண்டில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் முழுமையான அளவில் பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளது.

அதாவது நடப்பு கல்வியாண்டில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் மழலையர் வகுப்புகள் முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு முழுமையான முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் முழு அளவிலான பாடத்திட்டமும் நடத்தப்பட வேண்டும் என பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அந்த முறையில், 1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கடந்த 2019-20ம் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட்ட பாடத்திட்டங்கள் இந்த ஆண்டும் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.