சென்னையில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 21 பேர் உயிரிழப்பு

சென்னையில் ஒரேநாளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகிற 31-ந்தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று மேலும் 6,426 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 5,927 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,72,883 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,27,688-ல் இருந்து 2,34,114 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதுநகர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் சென்னையில் ஒரேநாளில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 14 பேரும், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 7 பேரும் சிகிச்சை பலனிற்றி இன்று பலியாகி உள்ளனர். அவர்களை அரசு கட்டுப்பாடுகளுடன் சுகாதாரத்துறையினர் அடக்கம் செய்தனர்.