சென்னையில் 21 ஆயிரத்து 766 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை; மண்டல வாரியாக முழு தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தோற்று தீவிரம் அடைந்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு 74,167 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,700-ஆக அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் 72 ஆயிரத்து 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 49 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 21 ஆயிரத்து 766 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு நேற்றுவரை 1,146 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 2,657
அண்ணா நகர் - 2,511
தேனாம்பேட்டை - 2,118
ராயபுரம் - 1,741
தண்டையார்பேட்டை - 1,628
திரு.வி.க. நகர் - 1,778
அம்பத்தூர் - 1,306
வளசரவாக்கம் - 1,049
அடையாறு - 1,412
திருவொற்றியூர் - 979
ஆலந்தூர் - 799
பெருங்குடி - 798
மாதவரம் - 778
சோழிங்கநல்லூர் - 463
மணலியில் - 463