ஹிஜாப் போராட்டத்தில் கலந்து கொண்ட 2வது நபருக்கு மரண தண்டனை

ஈரான்: ஹிஜாப் போராட்டத்தில் கலந்து கொண்ட 2வது நபருக்கு ஈரான் இன்று மரண தண்டனையை நிறைவேற்றியது.


தெஹ்ரானில் குர்திஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம் பெண்ணை ஈரானின் தார்மீக போலீஸார் செப்டம்பர் 13 ஆம் தேதி ஹிஜாப் அணியாததற்காக கைது செய்தனர். மாஷா அமினி கைது செய்யப்பட்ட போது போலீசார் தாக்கியதால் கோமா நிலைக்கு சென்றார்.


பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாஷா கடந்த 16ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். இரண்டு மாதங்களுக்கும் மேலான போராட்டங்களின் முதல் வெற்றியில், இஸ்லாமிய மதச் சட்டங்களை முறையாகப் பின்பற்றுவதையும், பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவதையும் உறுதி செய்வதற்காக ஈரான் தனது ஒழுக்கக் காவல்துறையை கலைத்துள்ளது.

அதே நேரத்தில், கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற போராட்டத்தில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், போராட்டக்காரர்களை ஈரான் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் கடுமையாகவும் கொடூரமாகவும் நடத்துகின்றனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தூக்கிலிடப்படுகின்றனர்.

ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தின் போது காவலாளியை கத்தியால் குத்திய மோஷென் ஷேகாரி என்ற நபருக்கு ஈரான் அரசு மரண தண்டனை விதித்தது. ஹிஜாப் எதிர்ப்பு தொடர்பாக தூக்கிலிடப்பட்ட முதல் நபர் மோஷன் ஆவார். இந்நிலையில், ஹிஜாப் போராட்டத்தில் கலந்து கொண்ட 2வது நபருக்கு ஈரான் இன்று மரண தண்டனையை நிறைவேற்றியது.


போராட்டத்தின் போது 2 ஈரானிய பாதுகாப்பு படை வீரர்களை கொன்றதற்காக மகித்ரிசா ரஹ்னவார்ட் தூக்கிலிடப்பட்டார்.