சாகச பயணம் சென்ற 3 பேர் சுறா மீன்கள் தாக்குதலில் சிக்கினர்... கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்

ஆஸ்திரேலியா: பத்திரமாக மீட்பு... ஆஸ்திரேலியா அருகே சுறா மீன்களின் தாக்குதலுக்கு உள்ளாகி கடலில் மூழ்கத் தொடங்கிய ரப்பர் படகில் தத்தளித்து கொண்டிருந்த 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ரஷ்யாவை சேர்ந்த இருவரும், பிரான்ஸை சேர்ந்த ஒருவரும் ரப்பர் படகு மூலம் உலகை சுற்றிவரும் சாகச பயணத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆஸ்திரேலிய கடற்கரையிலிருந்து 835 கிலோமீட்டர் தொலைவில் ஏராளமான சூறாக்கள் சூழ்ந்துகொண்டு தாக்கியதால் ரப்பர் படகு கிழிந்து கடலில் மூழ்கத் தொடங்கியது.

ரேடியோ மூலம் அவர்கள் அளித்த தகவலின் பேரில், ஆஸ்திரேலிய கடலோர காவல்படையினர் அவ்வழியாகச் சென்ற சரக்கு கப்பலுக்கு தகவல் அளித்து அவர்களை மீட்டனர். ஆஸ்திரேலியா அழைத்து வரப்பட்ட அவர்கள் புதிய படகொன்றை வாங்கிக்கொண்டு சாகச பயணத்தை தொடர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.