வெளிநாடுகளில் சிக்கி தவித்த 332 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த 332 இலங்கையர்கள் இன்று காலை நாடுதிரும்பியுள்ளனர்.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இது 205 உலக நாடுகளுக்கும் மேல் பரவி உள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பல்வேறு நாடுகளும் விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளது. வேலை மற்றும் கல்விக்காக வெளிநாடுகளில் இருந்த இலங்கையர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர். இதையடுத்து இலங்கை அரசு வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை தாயகம் அழைத்து வர ஏற்பாடுகள் செய்தது.

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் தங்கியிருந்த 332 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின் வாயிலாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவர்கள் அனைவரும் பிசி ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இலங்கையில் நேற்று கொரோனா பாதித்தவர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.