கொரோனாவால் பாதிக்கப்பட்ட 38, 889 பேர் சிகிச்சையில் உள்ளனர் - மாவட்ட வாரியாக முழு விவரம்

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 3,943 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 38 ஆயிரத்து 889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் இருந்து வந்தவர்களில் 435 பேர் சிகிச்சையில் உள்ளனர். ரெயில் நிலைய கண்காணிப்பில் 176 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மாநிலம் முழுவதும் மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 74 அதிகரித்துள்ளது. ஆனாலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,201 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:-
அரியலூர் - 44
செங்கல்பட்டு - 2,665
சென்னை - 22,610
கோவை - 331
கடலூர் - 427
தர்மபுரி - 53
திண்டுக்கல் - 189
ஈரோடு - 73
கள்ளக்குறிச்சி - 484
காஞ்சிபுரம் - 1,148
கன்னியாகுமரி - 221
கரூர் - 34
கிருஷ்ணகிரி - 99
மதுரை - 1,708
நாகை - 168
நாமக்கல் - 11
நீலகிரி - 57
பெரம்பலூர் - 6
புதுக்கோட்டை - 116
ராமநாதபுரம் - 594
ராணிப்பேட்டை - 300
சேலம் - 493
சிவகங்கை - 152
தென்காசி - 168
தஞ்சாவூர் - 241
தேனி - 537
திருப்பத்தூர் - 121
திருவள்ளூர் - 1,388
திருவண்ணாமலை - 1,009
திருவாரூர் - 292
தூத்துக்குடி - 277
திருநெல்வேலி - 217
திருப்பூர் - 63
திருச்சி - 339
வேலூர் - 964
விழுப்புரம் - 401
விருதுநகர் - 278