அரசு மருத்துவமனைகளில் 4000 செவிலியர்கள் 1 வார காலத்தில் நியமிக்கப்படுவார்கள் .. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்

சென்னை : தமிழகத்தில் கடந்தாண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை எதிர்பாராத அளவு அதிகரித்தது. அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையால் மருத்துவமனைகளில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவியது.

எனவே இதனை கருத்தில் கொண்டு அரசு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க முடிவு செய்தது.எனவே அதன்படி தொகுப்பூதிய அடிப்படையில் செவிலியர்களை நியமித்தது. இவர்களது பணி காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டும் வந்தது.

இதையடுத்து கடந்த 2022 டிசம்பர் 31-ம் தேதியுடன் நீட்டிக்கப்பட்ட பணி காலம் முடிவடைந்த நிலையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அரசு அறிவித்தது.எனவே இதனை எதிர்த்து தற்காலிக செவிலியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்து வந்தனர். இதனை அடுத்து இது பற்றி தற்காலிக செவிலியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்னும் 1 வாரத்தில் 4,308 செவிலியர்கள் நியமிக்கப்படுவர் தகவல் தெரிவித்துள்ளார்.