ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வருவதையொட்டி கோவையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு, டிரோன்கள் பறக்க தடை

கோவை: 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு வருகை .... ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு வருகிறார். எனவே இதற்காக அவர் இன்று டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் காலை 11.45 மணிக்கு மதுரை விமானநிலையம் வருகிறார்.

அதன் பின்னர் அவர், மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். இதையடுத்து தனி விமானத்தில் மாலை 3.10 மணியளவில் கோவை விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு கோவை, நீலகிரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுவுள்ளன. கோவையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுவுள்ளது. விமான நிலையம், அரசு விருந்தினர் மாளிகை மற்றும் ஜனாதிபதி செல்லும் பாதைகளிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

கோவை மாநகரில் 1,900 போலீசார், புறநகரில் 3,100 போலீசார் என்று மாவட்டம் முழுவதும் மொத்தம் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் கோவையில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை