தமிழகத்தில் 51 ஆயிரத்து 348 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை; மாவட்ட வாரியாக முழு தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் மாவட்ட வாரியாக சிகிச்சை பெற்று வருபவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அனைத்து மாவட்டங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது.

நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 51 ஆயிரத்து 348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 21 ஆயிரத்து 776 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,551 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:-
அரியலூர் - 95
செங்கல்பட்டு - 2,549
சென்னை - 15,127
கோவை - 1,259
கடலூர் - 448
தர்மபுரி - 271
திண்டுக்கல் - 893
ஈரோடு - 195
கள்ளக்குறிச்சி - 663
காஞ்சிபுரம் - 2,187
கன்னியாகுமரி - 1,465
கரூர் - 88
கிருஷ்ணகிரி - 153
மதுரை - 3,263
நாகை - 147
நாமக்கல் - 164
நீலகிரி - 339
பெரம்பலூர் - 44
புதுக்கோட்டை - 515
ராமநாதபுரம் - 1,030
ராணிப்பேட்டை - 1007
சேலம் - 850
சிவகங்கை - 873
தென்காசி - 764
தஞ்சாவூர் - 665
தேனி - 1,310
திருப்பத்தூர் - 172
திருவள்ளூர் - 3,457
திருவண்ணாமலை - 1,572
திருவாரூர் - 293
தூத்துக்குடி - 2,077
திருநெல்வேலி - 1,458
திருப்பூர் - 250
திருச்சி - 1,046
வேலூர் - 1,587
விழுப்புரம் - 777
விருதுநகர் - 1,909
விமானநிலைய கண்காணிப்பு - 370
ரெயில் நிலைய கண்காணிப்பு - 16