விக்டோரியா மாகாணத்தில் 6 மாதம் அவசர கால நிலை நீட்டிப்பு

6 மாதம் அவசரகால நிலை நீட்டிப்பு... ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதால் மேலும் 6 மாதத்திற்கு கொரோனா அவசரகால நிலையை நீட்டித்துள்ளனர்.

விக்டோரியாவின் பாராளுமன்றத்தின் மேல் சபைக் கூடி அவசரகால நிலையை நீட்டிப்பதற்கான சட்டத்தை முன் வைத்தனர். சபையில் 39 பேரில் 20 பேர் நீட்டிக்க விருப்பம் தெரிவித்ததால் சட்டத்தை அரசு நிறைவேற்றியது.

அரசுத் தரப்பில் 12 மாதங்களுக்கு நீட்டிக்க விரும்பிய நிலையில், இறுதியாக 6 மாதத்திற்கு நீட்டித்துள்ளனர்.

இந்த வாரம் தொற்றின் சராசரி 95 ஆக உள்ள நிலையில் அவசர கால நிலையை நீட்டித்துள்ளனர். கடந்த வாரம் தொற்றின் சராசரி 175 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பால் வேலையிழப்பு, பொருளாதாரம் சரிவு என்று பல்வேறு பிரச்னைகளில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.