ஈக்வடார் நாட்டில் 6.8 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம்

ஈக்வடார் நாட்டில் 6.8 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதில் 14 பேர் உயிரிழப்பு .... ஈக்வடார் நாட்டின் கடற்கரை மாகாணமான கயாஸ் மாகாணத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு 6.8 பதிவகி உள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 14 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக 12 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில்,தற்போது பலி எண்ணிக்கை 14-ஆகி அதிகரித்துள்ளது.

மேலும். இந்நிலநடுக்கத்தால் 44 வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், 90 வீடுகள், 50 கல்வி கட்டிடங்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து இந்நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 6.8 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் ஈக்வடார் நாட்டில் வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

மேலும், இதைப்போன்று இதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 55,000-க்கும அதிகமானோர் உயிரிழந்தார்கள்.