உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் 6,863,787 பேர் உயிரிழப்பு

இந்தியா: உலகம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளாகவே கொரோனா வைரஸின் தாக்கம் குறைவதும் கூடுவதுமாய் இருந்து கொண்டு வருகிறது. ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் தொடர்ந்து கொரோனா தொற்று உயர்ந்து தான் வருகிறது.

இந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்பான அறிவிப்பை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது.

அதாவது உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.71 கோடியாக இருப்பதாக தகவல் ஒன்றை உலக சுகாதார மையம் தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி பலியானவர்களின் எண்ணிக்கை 6,863,787 ஆக உள்ளதாகவும்,

இதனை அடுத்து கொரோனா தொற்றுக்கு ஆளாகி 659,659,564 பேர் கொரோனாவில் இருந்து மீண்டதாகவும் தற்போது 20,585,483 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இனிவரும் காலங்களில் இந்த இறப்பு விகிதம் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் விகிதம் உயர வாய்ப்புள்ளதாகவும் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.