இவர்களுக்கு பேருந்து கட்டணத்தில் 75% சலுகை அளிப்பு

சென்னை: பேருந்து கட்டணத்தில் 75% சலுகை ...... தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டு வருகிறது. அதைத்தொடர்ந்து கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடுகள் அளிக்கப்பட்டு கொண்டு வருகிறது.

இதனை அடுத்து அது மட்டுமல்ல மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் உதவிதொகையும் வழங்கப்பட்டு கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் சர்க்கரை நாற்காலிகளில் செல்ல ஏதுவாக புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாதையை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு அமைக்கப்பட்ட இந்த பாதை திட்டம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. அதை தொடர்ந்து தற்போது தமிழக முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

எனவே அதன்படி பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஏறும் இடத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டணமில்லாமல் பயணிக்கலாம். அதற்கு மேல் உள்ள தூரங்களுக்கு 75% கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மீதி 25% கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். மேலும் மாற்றுத்திறனாளிகள் ஏறி பயணிக்க ஏதுவாக புதிய பேருந்துகள் வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் அவர்கள் தெரிவித்துள்ளனர்.