சென்னையில் கொரோனாவுக்கு 9,938 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 63 ஆயிரத்து 691 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 76 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,59,683 ஆக உள்ளது. ஆனால் தற்போது மருத்துவமனையில் 9,938 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 1,141
அண்ணா நகர் - 1,144
தேனாம்பேட்டை - 874
தண்டையார்பேட்டை - 642
ராயபுரம் - 823
அடையாறு - 850
திரு.வி.க. நகர் - 841
வளசரவாக்கம் - 761
அம்பத்தூர் - 759
திருவொற்றியூர் - 210
மாதவரம் - 355
ஆலந்தூர் - 639
பெருங்குடி - 462
சோழிங்கநல்லூர் - 284
மணலி - 148