புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

கேப்வெர்டே: மேற்கு ஆப்பிரிக்க தீவு நாடான கேப் வெர்டே அருகே 100க்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்தோரை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததில் 60 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க தீவு நாடான கேப் வெர்டே அருகே 100க்கும் அதிகமான புலம் பெயர்ந்தோரை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று வந்துள்ளது. இந்த படகு அதிக எடையால் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் 60 பேர் உயிரிழந்தனர்.

படகில் இருந்து கடலில் குதித்து நீந்திய 38 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். படகு கவிழ்ந்ததை மீனவர்கள் சிலர் பார்த்து அதிகாரிகளுக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து கடலோரக் காவல்படையினர் மீட்பு நடவடிக்கையில் இறங்கினர்.

உயிர் பிழைத்தவர்களை இருகரம் நீட்டி வரவேற்போம் என்றும் உயிரிழந்தவர்களுக்கு உரியமரியாதையுடன் இறுதிச்சடங்குகளைச் செய்வோம் என்றும் கேப் வெர்டேயின் அமைச்சர் பிலோமினா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.