ராஜஸ்தானில் பள்ளி வளாகத்திலேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட எழுத்தர்

ராஜஸ்தான்: பள்ளி வளாகத்திலேயே தற்கொலை... ராஜஸ்தான் அரசுப் பள்ளி வளாகத்தில் எழுத்தர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் எழுத்தராக பணிபுரிந்து வந்தவர் ராம்சுக் மேக்வால்(55). இவர் பள்ளி வளாகத்தில் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அதில், 80 சதவீத தீக்காயங்கள் அடைந்த அவர் உடனடியாக அஜ்மீரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் பலியானார். பள்ளியின் முதல்வர் மற்றும் பிற ஊழியர்கள் தன்னை துன்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக மேக்வால் இறப்பதற்கு முன் அளித்த வாக்குமூலத்தில் குற்றம் சாட்டினார்.

இதைத்தொடர்ந்து பள்ளியின் முதல்வர் மற்றும் பிற ஊழியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக பள்ளியின் முதல்வர் சீமா சந்தேல் மற்றும் ஆசிரியர் ஒருவரையும் பணியிட நீக்கம் செய்து அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசுப் பள்ளி வளாகத்தில் எழுத்தர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.