கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தேவையான நடவடிக்கை

கொழும்பு: உயர்தரப் பரீட்சை குறித்து தகவல்... கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடத்துவது தொடர்பான அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை (திங்கட்கிழமை) முதல் 2 ஆயிரத்து 200 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.

3 இலட்சத்து 31 ஆயிரத்து 709 பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

அத்துடன், பரீட்சை நிலையங்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.