300 கிலோ எடை கொண்டவரை வீட்டை உடைத்து மீட்டனர்

வீட்டை உடைத்து 300 கிலோ உடல் எடை கொண்டவரை வெளியில் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் மீட்புபடையினர்.

பிரேசிலில் 300 கிலோ பருமன் கொண்ட நபர் ஒருவரை, வீட்டை உடைத்து மீட்புப் படையினர் கிரேன் மூலம் மீட்டுள்ளனர். பிரேசிலின் தெற்கு பிரான்சில் உள்ள Perpignan பகுதியைச் சேர்ந்த Alain P என்பவரைத்தான் இவ்வாறு மீட்டுள்ளனர்.

Alain P கடந்த ஆண்டு நடந்த விபத்து காரணமாக வீட்டுக்குள்ளேயே ஓய்வெடுத்ததால், அவருடைய உடல் எடை 250 முதல் 300 கிலோ வரை கூடியது. அவருக்கு சிகிச்சை அளிக்க அப்பகுதியில் உள்ள மருத்துவமனை முன்வந்ததை அடுத்து 50க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் கிரேன் வைத்து இடித்து, அந்த நபரை மீட்டனர்.

இதை வியப்புடன் அப்பகுதி மக்கள் பார்த்துக் கொண்டு இருந்தனர். மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மீட்பு படையினர் அவரை மருத:துவமனைக்கு கொண்டு செல்ல எடுத்த முயற்சிகளை மக்கள் பாராட்டினர்.