மதுரையில் வரும் செப்டம்பர் மாதம் 17ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

மதுரை : மதுரை மாவட்டத்தில் மாற்று திறனாளர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ‘we are your voice’ என்ற தொண்டு நிறுவனம் சார்பாக மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லுாரியில் இந்த முகாமானது நடைபெற உள்ளது.

இதை அடுத்து இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தகுதியுடையவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உள்ளது. இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், திருநம்பிகள், ‘www.weareyourvoice.org’ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செப்டம்பர் 27ம் தேதி நடைபெற உள்ள முகாமில் மதுரையை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாது மற்ற மாவட்டத்தினரும் பங்கேற்கலாம் எனவும் கூடுதல் விவரங்களுக்கு 75575 50999, 97007 99993 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ‘வீ ஆர் யுவர் வாய்ஸ்’ தொண்டு நிறுவனம் தலைமையில் சென்னை, நெல்லை, திருச்சி போன்ற மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.