நெல்லையில் வருகிற 9ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி : தமிழகத்தில் திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் வருகிற 9ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் இது தொடர்பாக திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதனை அடுத்து இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மையம் மற்றும் TVS பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 9ம் தேதி அன்று அபிஷேக பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

இம்முகாமில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், தென்காசி ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் இளங்கலை பட்டம் முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். அத்துடன் 2019,2020, 2021,2022 ஆகிய ஆண்டுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் முடித்திருப்பவராக இருக்க வேண்டும். இதில் கலந்து கொள்பவர்களுக்கு TVS நிறுவனத்தின் சார்பாக 21 நாட்கள் பயிற்சி வழங்கப்படும். அதன் பின் இவர்கள் ICICI வங்கியில் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தங்களின் சுயவிவரக் குறிப்பை பதிவேற்றம் செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அத்துடன் நேர்காணலுக்கு வருகை புரியும் மாணவர்கள் தங்களின் சுயவிவரக்குறிப்பு, பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம், தங்களின் கல்வி சான்றிதழ் மற்றும் ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது