தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. எனவே இதன் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற நவம்பர் 15ஆம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் இது புயல் சின்னமாக வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா அருகில் காற்றழுத்த மண்டலமாக மாறி பின் புயலாக உருவாகி ஆந்திராவில் கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இதன் காரணமாக நவம்பர் 17ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.