ஜப்பான் வடக்குப்பகுதி ஹொக்கைடோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஹொக்கைடோ: நிலநடுக்கம்... ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய தீவுப்பகுதியான ஹொக்கைடோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் நெமுரோ தீபகற்பத்தில் 61 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்க அதிர்வைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அடிக்கடி ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுகிறது.

முன்னதாக, துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களினால் இவ்விரு நாடுகளிலும் 50,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.