கொரோனா தொற்றாளர்கள் பயணித்த பஸ்கள் இனம் காணப்பட்டது

கொரோனா தொற்றாளர்கள் பயணித்த பஸ்கள்... இலங்கையில் இதுவரையில், கொரோனா தொற்றாளர்கள் பயணித்த ஆறு பேருந்துகள் இனங்காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே இதனை தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ND 4890 கொழும்பு – மெதகம பேருந்திலும் ND 2350 மாகும்புர – காலி பேருந்திலும் இவ்வாறு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அத்தோடு, ND 0549 கடவத்த – அம்பலாங்கொட பேருந்திலும் ND 6503 கொழும்பு – யாழ்ப்பாணம் பேருந்திலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம் ND 9788 எல்பிட்டிய – கொழும்பு பேருந்து மற்றும் NF 7515 காலி – கடவத்த பேருந்து ஆகியவற்றிலும் இவ்வாறு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிசொகுசு பேருந்துகளினுள் பயணிகளை ஏற்றும்போது அவர்களுடைய உடல் வெப்பநிலையை பரிசோதிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தந்போது பேருந்துகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.