பள்ளிகள் சங்கத்தின் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை

சென்னை: நடப்பு கல்வி ஆண்டில் வழக்கம் போல், ஜூன் மாதம் முதல் நேரடி முறையில், செயல்படத் தொடங்கியது. இந்தநிலையில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, மாணவர்கள் பல மாதங்களாக வீட்டில் இருந்து பழகி விட்டனர்.

இதை அடுத்து தற்போது தொடர்சியாக பள்ளிக்கு வருவது அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கும், அதனால் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே பள்ளிகள் செயல்பட வேண்டும். சனிகிழமைகளில் கட்டாயம் அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். அரசின் உத்தரவு மீறி செயல்படும் பள்ளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது.

இந்நிலையில், தற்போது மாவட்ட நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையின் படி, கொரோனா கால தொடர் விடுமுறைகள் காரணமாக மாணவர்கள் கற்றல் இழப்புகளை சந்தித்துள்ளனர். எனவே இதனால் பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் பாடத்திட்டங்களை முடிப்பதில் சிக்கல்கள் உள்ளது.

மேலும் இதற்க்கு உதவியாக இருக்கும் வகையில், பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மட்டும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்த முடிவை தமிழக பள்ளிக்கல்வித்துறை விரைந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.