மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்க வரும் நவ.28 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம்

சென்னை: தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு மக்களை அதிக அளவில் பாதிப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பலதரப்புகளில் இருந்தும் அரசின் மின்கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து இந்நிலையில், கடந்த வாரம் திடீரென்று அனைத்து மின் இணைப்பு எண்களுடனும் வீடு அல்லது வணிக கட்டிடத்தின் உரிமையாளர் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த புதிய உத்தரவு பற்றி மக்கள் அனைவரும் கலக்கம் அடைந்தனர். இதனால் தமிழக மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் மக்களுக்கு அடிக்கடி தேவையான விளக்கங்களை வெளியிட்டு வருகிறார்.


மேலும், , மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்காக வருகிற 28ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழக் ஆரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இருக்கக்கூடிய 2,811 பிரிவு அலுவலகங்களிலும் வருகின்ற 28ஆம் தேதி, அதாவது திங்கள்கிழமை முதல் வரும் 31ஆம் தேதி டிசம்பர் மாதம் இறுதி வரை சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் இலவசமாக வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் மின்சாரத்தில், எந்த மாற்றமும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.