பெரு நாட்டின் எல்லைப்பகுதியில் அவசர நிலை பிரகடனம்

பெரு: எல்லைப்பகுதியில் அவசர நிலை... சிலியில் இருந்துவரும் வெனிசுலாவை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் நாடு வழியாக செல்வதை தடுக்க பெரு நாட்டின் எல்லைப் பகுதிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சோதனைச் சாவடிகளை பலப்படுத்தவும், ஆவணங்கள் இல்லாமல் சிலியில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் புலம்பெயர்ந்தோரை தடுக்கவும் பெரு அதிபர் டினா பொலுவார்ட் உத்தரவிட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த அவசர நிலையை டினா பொலுவார்ட் அறிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஈக்வடார் வழியாக நுழைந்த 3 முதல் 4 லட்சம் வெனிசுலாவை சேர்ந்தவர்கள் பெருவில் ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.