நேபாளத்தில் குளத்தில் நகையைத் தேடும் பாரம்பரியத் திருவிழா

நேபாளம்: பாரம்பரிய திருவிழா... நேபாளத்தில், குளத்தில் நகையைத் தேடும் பாரம்பரியத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

டுடல்தேவி வைஷ்ணவி என்ற பெண் தெய்வம் குளத்தில் நீராடியபோது தவறவிட்ட நகையைத் தேடியதாக கூறப்படும் புராணக்கதை அடிப்படையாகக் கொண்டு டுடல்தேவி ஜாத்ரா (Tudaldevi Jatra) என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்தாண்டும் நடந்த இத்திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நகை தேடும் சடங்கின் ஒரு பகுதியாக, அலங்கரிக்கப்பட்ட டுடல்தேவி சிலையை பல்லக்கில் சுமந்தபடி குளத்தில் இறங்கி பக்தர்கள் வலம் வந்தனர்.