இந்தியாவில் அலட்சியத்தால் தான் 60 சதவீத கொரோனா தொற்று பரவுகிறது என ஆய்வில் தகவல்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, சர்வதேச பொருளாதாரமும் சரிவை கண்டுள்ளது. இதற்கு தடுப்பு மருத்து கண்டுபிடிக்கும் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன.

தற்போது இளைஞர்கள், கொரோனாவை அலட்சியப்படுத்துவதன் காரணமாக சில நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேஸஸ் கூறுகையில், உலகெங்கிலும் 1.7 கோடிக்கும் அதிகமான மக்களைக் பாதித்துள்ள தொற்றுநோய், முதியவர்களையும், 40 வயதுக்குமேல் உள்ளவர்களையும் அதிக அளவில் பாதித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் தங்கள் பாதுகாப்பைக் கைவிடுவதால் சில நாடுகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. லட்சியம் பொறுப்பில்லாத, பயமில்லாத மக்களால்தான் கொரோனா வைரஸ் 60 சதவீதம் பரவுகிறது. இந்தியா முழுவதிலும் 300 மாவட்டங்களிலிருந்தும் 8 லட்சம் மக்கள் பங்கேற்றதில் 70 சதவீதம் பேர் கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருவதாக டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கொரோனா பரவலைத் தடுக்க அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் 9.34 சதவீத மக்கள் அரசின் மருத்துவ சிகிச்சைகளில் திருப்தியில்லை. முறையான சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை என்று கூறியுள்ளனர். 12.45 சதவீத மக்கள் முறையான பரிசோதனைகள் கையாளப்படுவதில்லை என்று கருத்து தெரிவித்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.