காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையை கடக்கும் ... வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

சென்னை: நாளை கரையை கடக்கிறது .... வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை இலங்கை கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-திரிகோண மலையிலி ருந்து கிழக்கு, தென்கிழக்கே சுமார் 380 கி.மீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு, தென்கிழக்கே சுமார் 610 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இதையடுத்து இது இன்று மாலை வரை மேற்கு திசையிலும் அதன் பிறகு மேற்கு-தென்மேற்கு திசையிலும் நகர்ந்து நாளை காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும் என கணக்கிடப்படுகிறது.

எனவே இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.