அதிக விலைக்கு அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்தால் நடவடிக்கை

அதிக விலைக்கு அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமுலாகியுள்ள சில பகுதிகளில் அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களும், முகக்கவசங்களும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தற்போதைய சந்தர்ப்பங்களில் அவ்வாறான செயற்படுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட வர்த்தக தரப்பினருக்கு தாம் அறிவுறுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து தொடர்ந்து அவதானம் செலுத்தப்படுவதாகவும் இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.