மலர் கண்காட்சியை ஆன்லைனில் பதிவேற்றி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை

ஊட்டி தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சியை வீடியோவாக எடுது ஆன்லைனில் பதிவேற்றி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தோட்டகலைத்துறை இயக்குநர் இணை சிவசுப்ரமணி தெரிவித்துள்ளார்.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி இன்று (மே15) முதல் 20ம் தேதி வரை நடத்த தோட்டக்கலைத்துறை திட்டமிட்டது. இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மலர் கண்காட்சியை பார்வையிட பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட 250 வகையான 5 லட்சம் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

இதனை வீடியோவாக எடுது ஆன்லைனில் பதிவேற்றி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தோட்டகலைத்துறை இயக்குநர் இணை சிவசுப்ரமணி தெரிவித்துள்ளார்.