டெல்லியில் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு குரங்கு அம்மை நோய் உறுதி

டெல்லி:இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வர தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் தொற்றிலிருந்து படிப்படியாக மீண்டு வருகின்றார்கள். இந்நிலையில் குரங்கு அம்மை நோய் நாடு முழுவதும் பரவுவதால் உலக நாடுகள் பயத்தில் உள்ளனர். இதனால் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் உலக சுகாதார நிறுவனம் கலந்தோசித்து வருகிறது.மேலும் கடந்த மே மாதம் தொடங்கி 90 நாடுகளில் பரவியுள்ளது.தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரையில் நாடு முழுவதும் 29000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் குரங்கு அம்மை நோய் பரவலை உலக சுகாதார நிறுவனம் அவசர நிலையாக அறிவித்துள்ளது. மேலும் மக்கள் அதிகமாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதே சமயம் பிரேசிலில் இதுவரை 1700 பேர் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கேரளா, டெல்லி, ஆந்திரா என பல மாநிலங்களில் பரவி வருகிறது. மேலும் இந்த நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், உடல் வலி, தலைவலி, முதுகு வலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் போன்றவை இருக்க கூடும் என கூறப்படுகிறது.இதனால் குரங்கு அம்மை நோய் ஏற்பட்டவர்களில் 10ல் ஒருவர் இறக்க நேரிடும் என்றும் முறையான சிகிச்சை மேற்கொண்டால் உயிரிழப்பை தடுக்கலாம் என்று சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.


இதனை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களை விமான நிலையம், துறைமுகங்களில் கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த பெண் நைஜீரியாவில் இருந்து டெல்லி திரும்பியவர் என கூறப்பட்டுள்ளது.