காற்றின் தரம் குறைந்துள்ளது... எச்சரித்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

கொழும்பு: இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையுடன் தூசி துகள்களின் பரவல் அதிகரித்துள்ளமையே இதற்குக் காரணம் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் காற்று மாசு முகாமைத்துவ பிரிவின் தலைமை ஆய்வாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், 05 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பாதிக்கப்படக்கூடிய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் ஏனையோர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் சில நாட்களில் இந்நிலை படிப்படியாக வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.