தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் ஜூலை 18ம் தேதி திறப்பு

தமிழகம்: கடந்த கல்வியாண்டுக்கான தேர்வுகள் முடிவடைந்து தற்போது கோடை விடுமுறையில் இருக்கும் அனைத்து கல்லூரி மாணவர்ளுக்கும் ஜூலை 18ம் தேதியன்று புதிய வகுப்புகள் துவங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்மொடி அவர்கள் அறிவித்துள்ளார்.

இருப்பினும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை பணிகள் இன்னும் தொடங்காததால் ஜூலை 18 முதல் 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவர்கள் மட்டும் கல்லூரிக்கு வருகை தருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்மொடி, ‘தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் அரசுப் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 உறுப்பு கல்லூரிகளில் தொழிற்கல்வி மாணவர்கள் சேரும் வகையில் அவர்களுக்கு 2% இட ஒதுக்கீடு அறிவிக்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் புதிய மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு துவங்கிய முதல் நாளிலேயே 10,000க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பங்களை செலுத்தி இருந்தனர்.

ஆனால், CBSE மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானதும் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை பணிகள் துவங்கும்.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூலை மாதம் 18ம் தேதி முதல் மீண்டுமாக துவங்கும். இந்த அறிவிப்பு 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்’ எனவும் கூறியுள்ளார்.