பொதுமக்கள் அனைவரும் மீண்டும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும்

இந்தியா: இந்திய நிதி ஆயோக் அறிவுரை .... கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கடந்த ஒரு மாத காலமாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த நாட்டின் பெய்ஜிங் நகரில் தற்போது வரை மட்டும் 70% பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் வேகமெடுத்திருக்கும் கொரோனா மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சீனா மட்டுமல்ல பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதாக தகவல்கள் வந்துள்ளது.

இதனை அடுத்து இந்த நிலையில் இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது. டெல்லியில் சுகாதாரத்துறை அதிகாரிகளின் அவசர கூட்டம் இன்று நடைபெற்றது. இமத கூட்டத்திற்கு பிறகு நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் அவர்கள் மக்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.

அதாவது கொரோனா பாதிப்புகள் சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் அதிகரிப்பதால் பொதுமக்கள் அனைவரும் மீண்டும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும். இதுவரையிலும் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.