அமேசான் நிறுவனம் எடுத்த முடிவு... இந்திய ஊழியர்கள் 500 பேர் பணிநீக்கம்

புதுடில்லி: இந்திய ஊழியர்கள் பணிநீக்கம்... உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், இந்தியாவில் 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

தொழில்நுட்ப பங்குகளின் சரிவைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் உலகளில் 18 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்திருந்த அமேசான் நிறுவனம், மார்ச் மாதம் மேலும் 9 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருந்தது.

இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் வளர்ச்சி மந்தநிலையை சந்தித்துள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது 500 பேரை பணி நீக்கம் செய்துள்ளது.

பணிநீக்க செயல்முறை மேலும் தொடரும் என்றும், வலைதள சேவைகள், மனித வளம் உள்ளிட்ட துறைகளின் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.