உரிமைத்தொகை வாங்கும் பெண்களுக்கான அப்டேட்


சென்னை: தமிழக அரசு சார்பில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இத்திட்டம் விரைவில் விரிவு செய்யப்படும் என்றும், இது குறித்த மேலும் சில அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த திட்டத்தின் ஒரு அம்சமாக நீலகிரி மாவட்டத்தில் “மலையரசி தொடர் வைப்பு திட்டம்” அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த திட்டம் மூலம் மகளிர் உரிமை தொகையை சேமித்தால் வட்டி அதிகமாக கிடைக்கும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படும் 3 முதல் 4 சதவீதம் வட்டி என்பது குறைவானது என்பதால்,

கலைஞர் மகளிர் உரிமை திட்டப் பயனாளிகளின் நலனுக்காக நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி ரெகரிங் டெபாசிட் எனப்படும் தொடர் வைப்பு திட்டம் ஒன்றை தொடங்கி இருக்கிறது. இந்த மலையரசி தொடர் வைப்புத் திட்டம் என்ற ரெகரிங் டெபாசிட் திட்டத்தில் பணம் சேமித்தால் 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.