விரைவில் முதல்வர் தலைமையில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது..அன்பில் மகேஷ்

சேலம் : கல்வியின் வளர்ச்சி அதிகரிக்க நாட்டின் வளர்ச்சியும் முன்னேற்றம் அடைந்துள்ளது. மரத்தடியில் கற்ற கல்வி தான் இன்று பள்ளி கூடங்களில் கட்டிடம் எழும்பும் அளவிற்கும், மின் சாதனங்களுக்கு நடுவில் ஸ்மார்ட் போர்டு வகுப்பறையில் படிக்கும் காலகட்டத்திற்கு நாம் அனைவரையும் நகர்த்தி கொண்டு வந்துள்ளது.

இப்படியிருக்கையில் தற்போது இன்னும் சில நகரங்களில் டெக்னாலஜி வளராமல் அதே நிலையில் தான் பல மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக அரசு புது முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இதை அடுத்து சேலத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அரசு பள்ளி கட்டிடம் குறித்து சிலவற்றை பேசியுள்ளார்.

அதில், தமிழகம் முழுவதும் 10,031 அரசு பள்ளிகள் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாகவும், விரைவில் முதல்வர் தலைமையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இதற்காக இந்த ஆண்டு ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.