கர்நாடகவில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 பொது தேர்வுகள் நடத்த உள்ளதாக அறிவிப்பு

கர்நாடகம் : 10 மற்றும் 1ம் வகுப்பு பள்ளி இறுதி தேர்வு மதிப்புகள் தான் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய அம்சமாக விளங்கி கொண்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக அரசு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வுகளை மூன்று முறை நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளது.எனவே இதற்கான அனுமதியை கர்நாடக அரசு, கர்நாடகா மாநில தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரியத்திற்கு அளித்துள்ளது.

அதன்படி முதல் மற்றும் 2-ம் பொது தேர்வுகளில் கலந்து கொள்ள மாணவர்கள் 75% வருகைப்பதிவை கொண்டிருக்க வேண்டும். தேர்வுகள் முடிந்த பின் மாணவர்களின் மதிப்பெண்கள் டிஜி லாக்கர் முறையில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே இதன் மூலம் மாணவர்கள் ஒரு வருடத்தை இழக்காமல் தங்கள் கல்வியை தொடர முடியும்.இதையடுத்து இந்த தேர்வு முறையானது நடப்பு கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்காலிக அட்டவணையின் படி 12 ம் வகுப்புகளுக்கான 3 தேர்வுகளும் முறையே மார்ச் 1 முதல் 25, மே 15 முதல் ஜூன் 5 மற்றும் ஜூலை 12 முதல் 30 ஆகிய தேதிகளிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முறையே மார்ச் 30 முதல் ஏப்ரல் 15, ஜூன் 12 முதல் 18 மற்றும் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 5 வரையும் தேர்வு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.