வரும் 31ம் தேதி வரை தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ரத்து செய்து அறிவிப்பு

சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து... தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வரும் 31ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், ரயில், விமானம் மற்றும் பேருந்து போன்ற பொது போக்குவரத்திற்கு இன்னும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 7 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வந்தன.

தற்போது, கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், ரயில் சேவையை மீண்டும் ரத்து செய்ய தெற்கு ரயில்வேவுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

அதனடிப்படையில், ஏற்கனவே, ஜுலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரைரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்களின் சேவை வரும் ஜுலை 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.