இதுவரை 238 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

புதுடெல்லி: இதுவரை 238 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது என்று தெரவிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் நம் நாட்டில் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் 5ஜி சேவையை தொடங்கின.

ஜனவரி 31, 2023 நிலவரப்படி 238 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதாவது, அனைத்து உரிமம் பெற்ற சேவைப் பகுதிகளிலும் 5-ஜி சேவைகள் பரவலாக்கப்பட்டுள்ளன.

நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் 5ஜி சேவையை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு அலைக்கற்றை ஏலம் நடத்தப்படும்.

நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய தொலைத்தொடர்பு இணை அமைச்சர் தேவ் சிங் சவுகான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.