வடகொரியா அதிபர் ரஷ்ய சுற்றுப்பயணத்தை முடித்து தாயகம் திரும்பியதாக அறிவிப்பு

வடகொரியா: தாயகம் திரும்பினார்... ரஷ்ய சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தாயகம் திரும்பியதாக அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்கான தனது பயணத்தை முடித்துக் கொண்டு, திங்களன்று அதிகாலை வடக்கின் எல்லையான துமங்காங் ரயில் நிலையம் வழியாகச் சென்றதாக அரசு தொலைக்காட்சி KRT தெரிவித்துள்ளது.

இந்த பயணத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் நெருக்கமான ராணுவ உறவுகள் மற்றும் பிற ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அவர் ரஷ்யாவுக்கு பாதுகாப்புடன் கூடிய ரெயிலில் பயணித்து பின்னர் மீண்டும் அதே ரயிலில் வட கொரியா திரும்பினார்.