ஹரியானாவில் பெண்களுக்கு இலவச கல்வி வழங்கவுள்ளதாக அறிவிப்பு

ஹரியானா: ஆண்டு வருமானம் 1.8 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் குடும்பத்தை சார்ந்த பெண்களுக்கு இலவச கல்வி ..ஹரியானா மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கென முதல்வர் பல சலுகைகளை வழங்கி கொண்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற ஜன் ஆசிர்வாத் பேரணியில் கலந்துகொண்ட முதல்வர் பல அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

அதாவது, மாநிலத்தில் ஆண்டு வருமானமாக ரூ.1.8 லட்சம் மற்றும் அதற்கும் குறைவாக பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இலவசமாக கல்வி வழங்கப்படும் என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்து உள்ளார்.

மேலும், ரூ.1.8 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலும் ஆண்டு வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயில 50% கட்டணத்தை அரசு ஏற்கும் என்று அறிவித்துள்ளார். மேலும், இப்புதிய திட்டம் அடுத்த கல்வியாண்டில் இருந்து அமல்படுத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.