பிலிப்பைன்சில் ஒரு கார் வாங்கினால் மற்றொரு கார் இலவசம்

ஆச்சரிய அறிவிப்பு... பிலிப்பைன்சில் ஒரு கார் வாங்கினால் இன்னொரு கார் இலவசம் என்ற அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்றால் மக்களின் அன்றாட வாழ்க்கை மொத்தமாக முடங்கி உள்ளது. ஊதிய இழப்பு, வருவாய் பற்றாக்குறை என பல சிக்கல்களுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தால் பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளன. இந் நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு கார் நிறுவனம் ஒரு ஆச்சர்ய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

அதாவது, ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம் என்பதுதான் அது. ஹூண்டாயின் Santa Fe என்ற சொகுசுக் கார் ஒன்றின் விலை 38 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இதை வாங்கினால் 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள Reina Sedan என்ற கார் இலவசமாக கிடைக்கும் என்பது தான் அந்த அறிவிப்பு.

இந்த அறிவிப்பு இருக்க மற்றொரு நிறுவனமான கியா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் 1,500 ரூபாய் கொடுத்து புதிய காரை வாங்கி செல்லுங்கள், மீதி தொகையை தவணை முறையில் செலுத்தலாம் என்று அறிவித்து இருக்கிறது.