மாநிலங்களவை நியமன உறுப்பினராக குலாம் அலி நியமனம்

புதுடில்லி: நியமன உறுப்பினராக நியமனம்... ஜம்மு-காஷ்மீரின் குா்ஜாா் இஸ்லாமிய சமூகத்தைச் சோ்ந்த குலாம் அலி, மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கலை, அறிவியல், சமூக சேவை போன்ற பின்புலங்களிலிருந்து 12 பேரை மாநிலங்களவை நியமன உறுப்பினா்களாக குடியரசுத் தலைவா் நியமனம் செய்கிறாா்.

தற்போதைய நியமன உறுப்பினா்களில் ஒருவருடைய பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரின் குலாம் அலி நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குலாம் அலி ஜம்மு-காஷ்மீரின் குா்ஜாா் இஸ்லாமிய சமூகத்தைச் சோ்ந்தவா். இச்சமூகத்தைச் சோ்ந்தவா் மாநிலங்களவைக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.