மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்ட நடிகை குஷ்புக்கு குவியும் பாராட்டு

டெல்லி: மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம்... நடிகையும் பாஜக தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளருமான குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்ட குஷ்புவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நியமனம் குறித்து குஷ்பு கூறுகையில், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றார். மேலும் பிரதமர் மோடி அவர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.