பருப்பு உட்பட தானியங்கள் விலை உயர வாய்ப்பா? அரசு என்ன சொல்கிறது!!!

புதுடெல்லி : பருப்பு உட்பட தானியங்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ள நிலையில் அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது.

இது குறித்து மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை செயலர் ரோகித் சிங் கூறியதாவது: இந்தியாவில் தற்போது பருப்பு மற்றும் தானியங்கள் போதுமான அளவு இருப்பு உள்ளது. இதனால், உணவு தானியங்களின் விலை உயர்வு இப்போதைக்கு இல்லை. மத்திய அரசிடம் 2 லட்சத்து 50 ஆயிரம் டன் வெங்காயம் இருப்பு உள்ளது.

தற்போது சில மாநிலங்களில் வெங்காயத்தின் விலை அதிகமாக உள்ளதாக தகவல் கிடைத்ததும் உடனடியாக அந்த மாநிலங்களுக்கு வெங்காயம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தியாவில் ஆண்டுக்கு 2.72 லட்சம் டன் பருப்பு வகைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதில் 2 கோடியே 50 லட்சம் டன் பருப்பு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதியை இறக்குமதி செய்கிறோம். இந்த ஆண்டு 43 லட்சம் டன் பருப்பு கையிருப்பில் உள்ளது. எனவே தற்போது தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. தேவை அதிகமாக இருந்தால் உடனடியாக கொள்முதல் செய்யவும் தயாராக உள்ளோம்