பறவை காய்ச்சல் ... 6, 000 க்கும் மேற்பட்ட பறவைகள் அழிப்பு

இந்தியா: 6, 000 க்கும் மேற்பட்ட பறவைகள் அழிக்கப்பட்டுள்ளது .... ஏவியன் இன்புளுயன்ஸா என்ற வைரஸ் மூலமாக பறவை காய்ச்சல் பரவுகிறது. இந்த வைரஸ் அதிக அளவில் கோழி, வாத்து உள்ளிட்ட பறவை இனங்களை தாக்குகிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்ட பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் எளிதாக காய்ச்சல் பரவுகிறது.

இந்த வைரஸ் தாக்கப்பட்டவர்களுக்கு இருமல், சளி, தொண்டை புண், தலைவலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும்.இதனை அடுத்து தற்போது இந்தியாவில் பறவை காய்ச்சல் அதிக அளவு பரவி வருவதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அண்மையில் கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் காரணமாக பண்ணைகளில் வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகள் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் பறவை காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் கேரளாவின் உள்ள வெச்சூர், நீண்டூர், அர்ப்பூக்கரா உள்ளிட்ட 3 பஞ்சாயத்துகளில் வைரசால் பறவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கையாக அங்குள்ள 6, 017 பறவைகள் அழிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலன பறவைகள் வாத்துகள். இப்பறவை காய்ச்சலால் கேரளாவிலிருந்து லட்சத் தீவுகளுக்கு கோழிகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.