பிரதமர் அனிமேஷன் வீடியோவை வெளியிட்ட பாஜக

புதுடில்லி: பிரதமர் குறித்து அனிமேஷன் வீடியோ... பிரதமர் மோடியின் வளர்ச்சி, ஆட்சி போன்றவற்றை குறிக்கும் வகையில் பாஜக சார்பில் ஒரு அனிமேஷன் வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது.

சாதாரண தேநீர் விற்பவராக வாழ்க்கையைத் தொடங்கி குஜராத் முதலமைச்சராகவும் பின்னர் பிரதமராகவும் உயர்ந்த அவர், இந்தியாவை வலிமையான பொருளாதாரம் நோக்கி வழிநடத்திச் செல்வதாக அந்த வீடியோ விவரிக்கிறது.

எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகள், அவதூறுகள் யாவும் மோடியிடம் பலிக்கவில்லை என்றும் அந்த வீடியோவில் கூறப்பட்டு உள்ளது.